Friday, November 15, 2024
HomeLatest Newsபுதிய பிரதமருடன் இடைக்கால அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி இணக்கம்!

புதிய பிரதமருடன் இடைக்கால அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி இணக்கம்!

ஜனாதிபதியுடன் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சாதகமான பதில் கிடைத்துள்ளது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“இடைக்கால அரசாங்கமொன்றை ஸ்தாபிக்க அவர் இணங்கியுள்ளார்.

அதேபோன்று தற்போதுள்ள பிரதமரை நீக்கி புதிய பிரதமர் ஒருவரை நியமிக்கவும் அவர் தலைமையிலான புதிய அமைச்சரவையொன்றை ஸ்தாபிக்கவும் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எதிர்வரும் நாட்களில், அனைத்துக் கட்சிகளுக்கும் ஜனாதிபதி கடிதம் ஊடாக அழைப்பு விடுப்பார் என நாம் எதிர்ப்பார்க்கிறோம்

புதிய பிரதமர் தலைமையில் அமையவுள்ள புதிய அமைச்சரவையில், அமைச்சர்களின் எண்ணிக்கை 15 இலிருந்து 20 இற்குள் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளோம்.

அத்தோடு எமது கோரிக்கைக்கு இணங்க, தேசிய சபையொன்றை ஸ்தாபிக்கவும் ஜனாதிபதி இணங்கியுள்ளார்.“ எனத் தெரிவித்துள்ளார்.

Recent News