சீனாவின் ஹாங்சோவில் நடைபெறும் 19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று இந்திய விளையாட்டு வீரர்களுக்கு சீனா அனுமதி மறுத்துள்ளது.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனால், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தனது சீன பயணத்தையும் ரத்து செய்துள்ளார்.
அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த ஒனிலு தேகா, மெபுங் லாம்கு ஆகிய இரண்டு இந்திய தடகள வீரர்களுக்கு ஹாங்சோ ஆசிய விளையாட்டு போட்டிக்கான ஏற்பாட்டு குழு, போட்டியில் பங்கு கொள்வதற்கான அங்கீகார அட்டைகளை வழங்கின.
ஆனால், அதனை அவர்களால் பதிவிறக்கம் செய்ய முடியவில்லை. அதேபோல, அருணாச்சலத்தை சேர்ந்த தடகள வீரர் நெய்மன் வாங்சு, அங்கீகார அட்டையை பதிவிறக்கம் செய்த போதிலும், சீனாவுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளார்.
இதனை தொடர்தே செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஒலிம்பிக் விதிக்கு எதிரான ஒரு நாட்டின் இந்த பாரபட்சமான அணுகுமுறையை ஏற்றுக்கொள்ளவே முடியாது. சீனாவின் இந்த நடவடிக்கை இந்தியாவால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு வாய்ப்பை மறுத்ததால் எனது சீன பயணத்தை ரத்து செய்துள்ளேன்” என்றார்.