விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதாக இந்திய அரசியல்வாதி கூறுவது உண்மைக்குப் புறம்பானது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான அறிக்கைகள் நகைப்புக்குரியவை என பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் கேர்னல் நளின் ஹேரத் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதாக உலகத் தமிழர் அமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் தமிழகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்திருந்தார்.
தமிழினத்தின் விடுதலைக்காக பிரபாகரன் விரைவில் மக்கள் மத்தியில் வருவார் என பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இது தொடர்பான அறிக்கை உண்மைக்குப் புறம்பானது என பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் கேர்னல் நளின் ஹேரத் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணம் டிஎன்ஏ பரிசோதனையிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களான கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் தயா மாஸ்டர் ஆகியோரும் பிரபாகரனின் சடலத்தை அவதானித்ததன் பின்னர் அவரது மரணத்தை உறுதிப்படுத்தியதாக கேர்னல் நளின் ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.