தெற்கு பசுபிக் பிராந்தியத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
7.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், நியூ கலிடோனியா, பிஜி,சவனுவாட்டு போன்ற பகுதிகளில் சுனாமி பாதிப்புகள் ஏற்படக்கூடும் என வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
அதேவேளை பசுபிக் பகுதியில் உண்டான சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை தொடர்பான எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவலை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது.
பசுபிக் பகுதியில் இன்று (19) ஏற்பட்ட 7.7 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் வனுவாட்டு குடியரசு உள்ளிட்ட பசுபிக்கின் பல பகுதிகளுக்குச் சுனாமி அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.
லோயல்டி தீவுகள் அருகே நிலநடுக்கம் 37 கிலோமீட்டர் (23 மைல்) ஆழத்தில் பதிவானதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் பிஜியின் தென்மேற்கிலும், நியூசிலாந்தின் வடக்கேயும், அவுஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியிலும் உணரப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.