பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான ஜப்பான், அடிக்கடி நிலநடுக்கம் மற்றும் சுனாமி பேரலைகளால் பாதிக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் அந்த வரிசையில் நேற்றும் அங்கு அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு ஒட்டுமொத்த நாட்டையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.
7.6 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தால் கட்டடங்கள் அதிர்ந்ததுடன் வீதிகள் பிளந்து கடுமையாக சேதம் அடைந்தன.
அத்துடன் மிகப்பெரிய நிலநடுக்கம் என்பதால் உயர்மட்ட சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அது தளர்த்தப்பட்டுள்ளது.
இருந்த போதிலும் நேற்றைய புத்தாண்டு தினத்தில் இருந்து இன்று வரை அதிர்ந்து கொண்டே இருந்ததாக ஜப்பான் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை மொத்தமாக 155 முறை நில அதிர்வு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பெரும்பாலான நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவில் 3இற்கும் அதிகமாக பதிவாகியுள்ளன.
இந்த நிலநடுக்கம் காரணமாக 30 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் எனவும் அஞ்சப்படுகின்றது.
இன்னும் ஓரிரு நாட்களில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதால் கடற்கரையோர பகுதிகளில் கவனமாக இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.