நாடளாவிய ரீதியில் வெள்ளிக்கிழமை (03) முதல் இரவு நேரத்திலும் மீண்டும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அவசிய பராமரிப்பு நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் நிலையில், இரவு நேரங்களில் மின் விநியோகத்தடை ஏற்படுத்தப்படுமென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இதன்படி, வியாழன்,வெள்ளியும் வலயங்களின் அடைப்படையில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 9.30 வரையான காலப்பகுதியில் இரண்டு மணிநேர மின் விநியோகத்தடை அமல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இதற்கமைய, A முதல் Q வரையான வலயங்களில் பிற்பகல் 2 மணி முதல் 5.30 வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும், மாலை 6 மணி முதல் இரவு 9.30 வரையான வலயங்களில் ஒரு மணித்தியாலமும் இவ்வாறு மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
அத்துடன், CC வலயங்களில் காலை 6 மணி முதல் 9.20 வரையான வலயங்களில் 3 மணி நேர மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
போதுமானளவு மின் உற்பத்தியின்மை காரணமாக இவ்வாறு மின் விநியோகத்தடையினை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.
அத்துடன் 5 ஆம் திகதி மின்வெட்டு அமுலில் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியைக் கருத்திற் கொண்டு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் காலம் குறைக்கப்பட்டது.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சைகள் இன்றைய தினம் நிறைவடையவுள்ள நிலையிலேயே, வழமை போன்று மின் வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.