“யாழ்ப்பாணத்தில் மூன்று தீவுகளில் மேற்கொள்ளப்படவுள்ள புதுப்பிக்கத்தக்க சக்தி மூலமான மின் உற்பத்தி திட்டத்துக்கு இந்தியா 75 வீத நிதியுதவியை வழங்குகின்றது. அதனை 85 வீதம் வரை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளோம்.”
- இவ்வாறு மின்சக்தி அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
முன்னதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன் உதவியின்கீழ் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவிருந்தது. எனினும், இந்தியாவிடம் இருந்து 75 வீத நிதி மானியமாக இந்தத் திட்டத்துக்குக் கிடைக்கின்றது – என்றார்.