வீட்டில் செல்வம் பெருக, அதிர்ஷ்டம் தேடி வர, நேர்மறை எண்ணங்கள் எப்போதும் இருக்க மணி பிளாண்டை பலரும் வளர்க்கிறார்கள்.
வாஸ்து முறைப்படி மணி பிளாண்டை வளர்த்தாலும் நாம் செய்யும் ஒருசில தவறுகளால் வறுமை நீங்காமல் துரதிஷ்டம் வந்து சேரும்.
இதற்கான காரணங்கள் என்ன? மணி பிளாண்டை வளர்ப்பதில் நாம் செய்யும் தவறுகள் என்னென்ன? என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.
மணி பிளாண்டை வளர்க்கும் போது
மண்
மணி பிளாண்ட் வளர்ப்பதற்கான மண் சிறந்ததாக இருக்க வேண்டும், ஏனெனில் மண் தான் செடிகள் நன்கு வேர்விட்டு வளர்வதற்கான ஆதாரம், ஆற்று மணல் மற்றும் சாதாரணை மண்ணை கலந்து கூட மணி பிளாண்ட் செடியை வளர்க்கலாம். மணி பிளாண்ட் செடியை அப்படியே நட்டுவைக்காமல், சிறு தண்டை தண்ணீரில் விட்டுவைத்து சிறிது வேர் வந்ததும் மண்ணில் நடலாம், இது செடி ஆரோக்கியமாக வளர உதவும்.
தண்ணீர்
எந்த செடி வளர்வதற்கும் தண்ணீர் இன்றியமையாத ஒன்று, ஆனால் மணி பிளாண்ட் வளர்ப்பதற்கு தண்ணீர் அவ்வளவாக தேவைப்படாது, காலநிலையை பொறுத்து தண்ணீர் விடவும். வெயில் காலமாக இருந்தால் 7 அல்லது 10 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் விடவும், மழைக்காலமாக இருந்தால் தண்ணீரை தெளித்துவிட்டாலே போதும்.
சூரிய வெளிச்சம்
வீட்டிற்குள் மணி பிளாண்ட் வளர்த்தாலும், செடி பச்சை பசேலென்று வளர சூரிய வெளிச்சம் அவசியம், அதிக சூரிய வெளிச்சம் படாலும், அதிக நிழலும் இல்லாமலும் பார்த்துக் கொள்ளுங்கள். இலைகள் கருகி இருந்தால் அதனை துண்டித்து விடுவது அவசியம், ஏனெனில் கருகிய இலைகள் துரதிஷ்டத்தை வரவழைக்கும், எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கலாம்.
உரங்கள்
மணி பிளாண்ட் வளர்வதற்கு எந்த உரமும் தேவையில்லை, சரியான அளவில் மண், தண்ணீர் மற்றும் சூரிய வெளிச்சம் இருந்தாலே செழித்து வளரும், ஆனால் மாதத்திற்கு ஒருமுறை உரமிட்டால் நல்லதே, குளிர்காலங்களில் உரமிடுவதை தவிர்க்கவும். மிக முக்கியமாக மாலை நேரங்களில் மட்டுமே உரமிட வேண்டும்.
தண்ணீரில் வளர்க்கும் போது,
- மணிபிளாண்ட் செடியை தண்ணீரில் வளர்த்தால் அடிக்கடி நீரின் அளவை பரிசோதித்து விடுங்கள்.
- காலை நேரங்களில் செடிக்கு தேவையான அளவு சூரிய வெளிச்சம் கிடைக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
- வாரத்திற்கு ஒருமுறை அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை தண்ணீரை மாற்றவும்.
- கடைசி கணு வரை தண்ணீர் குறைந்துவிடாத அளவுக்கு பார்த்துக் கொள்ளவும்.
- தண்ணீரில் வளரும் செடிகளுக்கு உரங்கள் ஏதும் தேவைப்படாது.