Saturday, December 28, 2024
HomeLatest Newsதபால் ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டது!

தபால் ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டது!

தபால் தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்திருந்த தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.

ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்டவுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் ஏற்பட்ட இணக்கப்பாட்டையடுத்து, கடந்த ஜூன் 28 ஆம்திகதி முதல் முன்னெடுக்கப்பட்டிருந்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது.

நாட்டில் நிலவும் நெருக்கடி காரணமாக, வாரத்தில், செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய 3 நாட்களில் மாத்திரம் அஞ்சல் நிலையங்கள் ஊடாக சேவைகளை முன்னெடுக்க அஞ்சல் திணைக்களம் கடந்த வாரம் தீர்மானம் மேற்கொண்டிருந்தது.

இந்த தீர்மானத்தின் ஊடாக, சனிக்கிழமை பணியாற்றுவதன் மூலம் தமக்கும் கிடைத்துவந்த மேலதிக கொடுப்பனவு இல்லாது போவதாக தெரிவித்து, மேற்படி தீர்மானத்துக்கு எதிராக அஞ்சல் தொழிற்சங்கள் இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தன.

Recent News