Friday, January 24, 2025
HomeLatest Newsஎலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் பாப்பரசர்?

எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் பாப்பரசர்?

இரண்டாம் எலிசபெத்தின் மகாரணியின் இறுதிச் சடங்கில் பாப்பரசர் பிரான்சிஸ் கலந்து கொள்ள மாட்டார் என்று வத்திகான் தெரிவித்துள்ளது.

பிரித்தானிய இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உடல்நல கோளாறுகளால் கடந்த 8 ஆம் திகதி தனது 96 வயதில் மரணம் அடைந்தார்.

ஸ்கொட்லாந்தில் உள்ள பால்மோரல் கோட்டையில் அவரது உயிர் பிரிந்தது. மகாராணியின் மறைவால் ஒட்டுமொத்த பிரித்தானியாவும் சோகத்தில் மூழ்கியுள்ளது.

அவரது இறுதி சடங்கு வருகிற 19 ஆம் திகதி லண்டனில் நடைபெறுகிறது. இதில் உலக தலைவர்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள்.

இந் நிலையில் லண்டனில் நடைபெறும் இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் கத்தோலிக்க திருச்சபைகளின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ் கலந்து கொள்ள மாட்டார் என்று வத்திக்கான் இன்று தெரிவித்துள்ளது.

பாப்பரசர் பிரான்சிஸிற்கு பதிலாக வத்திக்கானின் வெளிவிவகார அமைச்சர் பால் கல்லகர் இந்த இறுதி சடங்கில் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent News