Saturday, January 11, 2025
HomeLatest Newsகாலி முகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவளித்த பொலிஸ் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

காலி முகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவளித்த பொலிஸ் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

காலி முகத்திடலில் போராட்டகளத்துக்கு சீருடையுடன் சென்று அதற்கு ஆதரவு தெரிவித்த பொலிஸ்சார்ஜண்ட் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குட்டிகல பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிவந்த சார்ஜன்ட் டப்ளியூ.எம்.அமரதாச (30158) காலி முகத்திடல் ஆர்ப்பாட்ட களத்திற்கு சென்றிருந்தார்.

இதுதொடர்பில், அவர் கடந்த 14 ஆம்திகதி பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு, துறைமுக பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டார்.

இதனையடுத்து, மறுநாள் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், அவர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

Recent News