Thursday, January 23, 2025
HomeLatest Newsசட்டவிரோதமாக நுழையும் அகதிகளை கைது செய்ய காவல்துறைக்கு அதிகாரம்.

சட்டவிரோதமாக நுழையும் அகதிகளை கைது செய்ய காவல்துறைக்கு அதிகாரம்.

அமெரிக்காவின் அண்டை நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழையும் அகதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் அகதிகளை தடுக்கும் விதமாக அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கடுமையான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்படி உள்ளூர் காவல்துறை அதிகாரிகளே அகதிகளை கண்டறிந்து கைது செய்யலாம் எனவும் அவர்களுக்கு நீண்டகால சிறை தண்டனையும் 2 ஆயிரம் டாலர்(சுமார் ரூ.1.50 லட்சம்) அபராதமும் விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க மத்திய அரசின் சட்டப்படி இவ்வாறு உள்ளே நுழைவது குற்றமாக கருதப்பட்டாலும் அமெரிக்க குடியுரிமை நீதிமன்றங்களில் சிவில் வழக்காகவே இவை விசாரிக்கப்படுகின்றன.

மேலும் டெக்சாஸ் நீதிமன்ற நீதிபதிகள் அந்த அகதிகளை மீண்டும் எல்லைக்கு அப்பால் கொண்டு சென்று விட உத்தரவிட முடியும் எனவும் மீண்டும் நுழைய முயல்பவர்களுக்கு 20 வருடம் வரை சிறை தண்டனை வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Recent News