Friday, November 22, 2024
HomeLatest Newsநச்சுத் தன்மை வாய்ந்த கீரை ! - சுகாதாரத் துறை எச்சரிக்கை

நச்சுத் தன்மை வாய்ந்த கீரை ! – சுகாதாரத் துறை எச்சரிக்கை

நச்சுத்தன்மை வாய்ந்த கீரையை உட்கொண்டவர்கள் கடுமையான நோய் மற்றும் மாயத்தோற்றங்களுக்கு ஆளானதை அடுத்து, அவுஸ்திரேலியாவில் அவசர சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காஸ்ட்கோவில், ரிவியரா ஃபார்ம்ஸ் உற்பத்தி செய்யப்பட்ட பேபி கீரை சாப்பிட்ட ஒன்பது பேருக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டதாக அந்நாட்டு சுகாதார துறை அறிவித்துள்ளது.

அவர்களின் அறிகுறிகளில் மயக்கம், அதிகரித்த இதய துடிப்பு மற்றும் மங்கலான பார்வை ஆகியவை அடங்கும் என்று சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.

இது குறித்து ரிவியரா ஃபார்ம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கீரை ஒரு களையால் மாசுபட்டது என்றும் ஆனால் வேறு எந்த தயாரிப்புகளும் பாதிக்கப்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் ஹெல்த் நிறுவனம், டிசம்பர் 16 காலாவதியாகும் பிராண்டின் கீரையின் எந்தப் பாக்கெட்டுகளையும் உட்கொள்வது பாதுகாப்பானது அல்ல, அவற்றை வெளியே எறிய வேண்டும் என்று எச்சரித்துள்ளது.

கீரையை சாப்பிட்ட பிறகு ஏதேனும் அசாதாரண அறிகுறிகளை அனுபவித்தவர்கள் உடனடியாக மருத்துவமனையை நாடுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதில் யாரும் உயிரிழக்கவில்லை. அதனால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், அது அப்படியே இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என மாநிலத்தின் விஷம் தகவல் மையத்தைச் சேர்ந்த வைத்தியர் டேரன் ராபர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுத்ததாக ரிவியரா ஃபார்ம்ஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Recent News