Wednesday, December 25, 2024
HomeLatest Newsதயவு செய்து இந்த நிலைக்கு ஆளாக்காமால் எங்களை விடுதலை செய்து எங்களை குடும்பங்களுடன் வாழவிடுங்கள்- ஈழ...

தயவு செய்து இந்த நிலைக்கு ஆளாக்காமால் எங்களை விடுதலை செய்து எங்களை குடும்பங்களுடன் வாழவிடுங்கள்- ஈழ அகதிகள் பாடை ஊர்வலப் போராட்டம்!

தமிழகத்தில் சிறப்பு முகாம்களில் உள்ள ஈழ அகதிகள் உண்ணா விரத போராட்டத்தினை தொடர்ந்து நடாத்தி வருகின்றனர் .

அந்தவகையில் இன்றைய தினம் மேற்படி அகதிகள் வீடா ? காடா ? என்ற கண்ணீர் அஞ்சலி பதாகை ஏந்தி போராட்டத்தினை நடாத்தினர்.

மேலும் குறித்த போராட்டத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பாடை ஒன்று ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டிருந்து .அத்துடன்” சிறை வாசிகளுக்கு இந்த நிலை தான் ” என்ற வாசகங்களை வரைந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் .

தமிழக முதல்வரிடம் ”தயவு செய்து இந்த நிலைக்கு ஆளாக்காமால் எங்களை விடுதலை செய்து எங்களை குடும்பங்களுடன் வாழ் விடுங்கள் ” என கோரிக்கையினை விடுத்திருந்தனர்.

Recent News