Tuesday, December 24, 2024
HomeLatest Newsதயவு செய்து திருமணம் செய்யுங்கள் - பெண்களிடம் கெஞ்சும் முக்கிய நாடு.!

தயவு செய்து திருமணம் செய்யுங்கள் – பெண்களிடம் கெஞ்சும் முக்கிய நாடு.!

சீனாவில், குழந்தை பிறப்பு விகிதம் கடுமையாக சரிந்து வருவதால் , திருமணத்தின் முக்கியத்துவம், குழந்தை பெற்றுக் கொள்வதன் அவசியம் மற்றும் குழந்தை வளர்ப்பின் மகத்துவம் தொடர்பாகவும் பெண்கள் மத்தியில் அந்நாட்டு அரசு புதிய பிரசார பணிகளை ஆரம்பித்துள்ளது.

உலகிலேயே அதிக மக்கள் தொகையுடைய நடக்கவிருந்த சீனா, ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை என்ற கொள்கையை, 1980 முதல் 2015 வரை நடைமுறைப்படுத்தியமையால் அங்கு மக்கள் தொகை ஆண்டுக்கு சராசரியாக 1.1 சதவீத சரிவை சந்தித்தது.

அத்தோடு கடந்த 60 ஆண்டுகளில் முதல் முறையாக, சீன மக்கள் தொகை 2022 இல் கடுமையாக சரிந்தது.இதனால், உலகின் அதிக மக்கள் தொகையுடைய நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த இந்தியா, சமீபத்தில் சீனாவை பின்தள்ளி முதலிடத்தை பிடித்தது.

மக்கள் தொகை சரிந்தமை சீனாவின் பொருளாதார வளர்ச்சியிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதனால் மக்கள் தொகை உயர்வை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு திட்டங்களை அந்நாட்டு அரசு நடைமுறைப்படுத்தியது.

உள்ளூர் வர்த்தக நிறுவனங்கள், திருமணம் செய்து கொள்ளும் ஊழியர்களுக்கு 30 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறையை அறிவித்தன. அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ளும் ஊழியர்களுக்கு வரிச் சலுகை, வீடு கட்ட மானியம், மூன்றாவது குழந்தைக்கு சிறப்பு மானியம் உள்ளிட்ட சலுகைகளை அந்நாட்டு அரசு அறிவித்தது.

சீன கல்லுாரிகள் கடந்த மாதம் 1 முதல் 7 வரை, மாணவர்கள் காதலிப்பதற்காக சிறப்பு விடுமுறை அளித்திருந்தன.

இவற்றிற்கும் மேலாக, திருமணம், மகப்பேறு மற்றும் குழந்தை வளர்ப்பை ஊக்குவிக்கும் விதமான பல்வேறு திட்டங்களை சீன அரசு நடைமுறைப்படுத்தியுள்ளதுடன் இது குறித்து பெண்கள் மத்தியில் தீவிர பிரசாரத்தை ஆரம்பித்துள்ளது.

இதில், திருமணத்தின் முக்கியத்துவம், சரியான வயதில் குழந்தை பெற்றுக் கொள்வதன் அவசியம், குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பை பெற்றோர் பகிர்ந்து கொள்வது, திருமணத்துக்கான வரதட்சணை தொகையை குறைப்பது போன்றவை தொடர்பாக தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றது.

ஏற்கனவே பீஜிங் உட்பட 20 நகரங்களில் இந்த பிரசாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் பல்வேறு நகரங்களில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Recent News