Tuesday, December 24, 2024
HomeLatest Newsசிங்கத்துடன் விளையாட்டு! அதிர்ச்சியில் உறைய வைக்கும் திக் திக் நிமிடங்கள்

சிங்கத்துடன் விளையாட்டு! அதிர்ச்சியில் உறைய வைக்கும் திக் திக் நிமிடங்கள்

காட்டின் ராஜா சிங்கம் என்றால் யார் தான் பயப்படாமல் இருப்பார்கள். அதன் உறுமல் சத்தமே பலருக்கும் பீதியை கிளப்பும்.அப்படிபட்ட சிங்கத்தையே நண்பனாக்கி சிறுவன் ஒருவன் விளையாடுகிறான் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

gir_lions_lover என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான இந்த வீடியோ லைக்ஸ்களை குவித்து வருகிறது.
இரண்டு சிங்கங்களுடன் மிக ஜாலியாக சிறுவன் விளையாடிக் கொண்டிருக்கிறார். சிங்கத்தின் வாய்க்குள் கையை விட்டும், செல்லமாக அடித்தும் விளையாடுகிறார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் கலவையான கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். என்ன இது முட்டாள்தனமான செயல், தைரியமான சிறுவன் என கமெண்டுகள் வர வீடியோ வைரலாகி வருகிறது.

Recent News