Monday, December 23, 2024
HomeLatest NewsWorld News2038இல் பூமியைத் தாக்கும் கோள்; நாசா தகவல்!!!

2038இல் பூமியைத் தாக்கும் கோள்; நாசா தகவல்!!!

இன்னும் 14 ஆண்டுகளில், ஒரு பெரிய கோள் ஒன்று பூமியைத் தாக்கக்கூடும் என நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜூலை 12, 2038 அன்று, கோள் ஒன்று பூமியைத் தாக்கக்கூடும் என நாசா கூறியுள்ளது.மேரிலாந்தில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையுடன் இணைந்து பூமியை கோள்களில் இருந்து பாதுகாப்பது குறித்து இடம்பெற்ற விஷேட பட்டறையின் முடிவின் போதே நாசா நிறுவனம் இவ்வாறு தெரிவித்துள்ளது.

இந்த பட்டறையில் வானியலாளர்கள், வானியற்பியல் வல்லுநர்கள் மற்றும் அமெரிக்க இராணுவத் துறைகளின் தலைவர்களும் பங்கேற்று கோள்கள் பற்றிய தங்களின் அறிவையும் தரவையும் பகிர்ந்து கொண்டனர்.இதன்போது பூமி அருகில் அவ்வப்போது கடந்து செல்லும் கோள்கள் மற்றும் அவற்றின் பாதைகளை கணினி மூலம் ஆய்வு செய்ததில், பூமிக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பெரிய கோள் ஒன்று 2038 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் திகதி பூமியை நோக்கி வரும் என்றும், அது பூமியில் மோதும் சதவிகிதம் 72 % என்றும் நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது .

இந்த கோள் பூமியை தாக்குவதாக இருந்தால் அதை அழிக்க அல்லது அதன் பாதையை மாற்றுவதற்கான திட்டங்களை வகுப்பதன் முக்கியத்துவத்தை அமெரிக்க ராணுவ தளபதிகள் சுட்டிக்காட்டியதாகவும் கூறப்படுகிறது.

Recent News