Wednesday, December 25, 2024
HomeLatest NewsIndia Newsமேக் இன் இந்தியாவாக மாறத் திட்டம்...!கூகிள் எடுத்த அதிரடித் தீர்மானம்...!

மேக் இன் இந்தியாவாக மாறத் திட்டம்…!கூகிள் எடுத்த அதிரடித் தீர்மானம்…!

கூகிள் தயாரிப்புகளை இந்தியாவில் இருந்து உற்பத்தி செய்வதற்கு கூகிள் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேக் இன் இந்தியா திட்டத்தில் இந்திய நிறுவனங்கள் மட்டுமன்றி வெளிநாட்டு நிறுவனங்களும் இந்தியாவில் தங்களது உற்பத்தியை ஆரம்பித்து வரும் நிலையில் கூகிளும் இந்தியாவில் களமிறங்குவதற்கு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் தனது உற்பத்தியை ஆரம்பித்து நடத்தி வரும் ஆப்பிள் நிறுவனம், அண்மையில் மும்பை மற்றும் டெல்லியில் தனது அதிகாரப்பூர்வ சொந்த விற்பனையகங்களை தொடங்கி பெரும் இலாபத்தை ஈட்டியுள்ளது.

அதற்கு அடுத்தபடியாக இந்தியாவில் தனது தயாரிப்புகளை ஆரம்பிப்பதற்கு கூகிளும் முயற்சி செய்து வருகின்றது.

அந்த வகையில், தனது கூகிள் பிக்ஸல் ஸ்மார்ட் போன்களை இந்தியாவிலிருந்து தயாரிப்பதற்கு கூகிள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அதற்காக இந்திய ஸ்மார்ட் போன் நிறுவனங்களான லாவா, ஃபாக்ஸ்கான் மற்றும் டிக்ஸான் நிறுவனங்களுடன் கூகிள் பேசி வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

மேலும், இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் ஸ்மார்ட்போன்களுக்கு வரி குறையும் என்பதால் பிக்ஸல் இந்தியாவில் நல்ல விற்பனையை பெறும் என்றும் கூகிள் எதிர்பார்க்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Recent News