நீண்ட தூர இலக்குகளை தாக்கக்கூடிய SCALP ஏவுகணைகளை பிரான்ஸ் உக்ரைனுக்கு வழங்கியுள்ளது.
525 நாட்களை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகின்ற உக்ரைன் ரஷ்யா இடையிலான போரில் நீண்ட தூர இலக்குகளை தாக்கி அளிக்க கூடிய வகையிலான ஏவுகணைகளை தங்களுக்கு வழங்குமாறு உக்ரைன் உலக நடுக்களை தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் நீண்ட தூர இலக்குகளை தாக்கி அழிக்கும் SCALP ஏவுகணைகளை பிரான்ஸ் உக்ரைனுக்கு வழங்கியுள்ளது.
விமானப்படை தளத்தில் உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, உக்ரைனிய விமானப்படை வீரர்கள் பயன்படுத்தும் இராணுவ உபகரணங்கள் மற்றும் மார்டன் ஆயுதங்களை பார்வையிட்டுள்ளதோடு பிரான்ஸ் நாட்டின் SCALP ஏவுகணைகள் மீது உக்ரைனுக்கு வெற்றி என்றும் கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.