Friday, January 24, 2025
HomeLatest Newsஉலகிலே மிகவும் நீளமான மூக்கு - நபருக்கு ஏற்பட்ட பரிதாபம்..!

உலகிலே மிகவும் நீளமான மூக்கு – நபருக்கு ஏற்பட்ட பரிதாபம்..!

உலகின் மிகவும் நீளமான மூக்குடையவர் என்ற பெருமைக்குரிய நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

உயிருடன் இருக்கும் பொழுது, நபர்களில் மிகவும் நீளமான மூக்குடையவர் என்று மூன்று முறை விருதினை பெற்ற துருக்கியை சேர்ந்த 75 வயதான மெஹ்மெட் ஓசியூரெக் என்பவரே உயிரிழந்துள்ளார்

கடந்த வாரம் அவருக்கு அறுவை சிகிச்சை இடம்பெறவிருந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், மெஹ்மெட் ஓசியூரெக் மரணமடைந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

துருக்கியின் ஆர்ட்வின் நகரில் அவரை நல்லடக்கம் செய்ய இருப்பதாகவும் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் தரப்பு தெரிவித்துள்ளது.

இதுவரை அவருக்கு ஆதரவும் அன்பும் செலுத்தி வந்த ஆர்ட்வின் நகர மக்களுக்கு அவரது மகன் நன்றி தெரிவித்துள்ளார்.

அத்துடன், தாங்கள் துயரத்தில் இருப்பதாகவும், தமது தந்தை மிகவும் இரக்க குணம் கொண்டவர் என்றும்
அவரது உள்ளத்தில் அமைதி இருந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மிக லேசான வாசனையை கூட அவர் அடையாளம் கண்டுவிடுவார் என்பதுடன், சாதாரண மக்களால் அந்த வாசனையை அனுபவிக்கவே முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

தான் புரிந்து கொண்டவரை இது ஒரு பரம்பரை பழக்கம் எனவும், தமது தந்தை உட்பட சிலருக்கு இந்த வாசனையை அடையாளம் காணும் திறன் இருந்தது எனவும் அவரது மகன் கூறியுள்ளார்.

Recent News