சந்திராயன் 3 விண்கலம் எடுத்த புவி மற்றும் இரண்டு நிலாவினுடைய புகைப்படங்களை இஸ்ரோ தற்போது வெளியிட்டுள்ளது.
நிலவில் தரையிறங்கி ஆய்வுகளை செய்வதற்காக இந்திய விண்வெளி நிறுவனம் தயாரித்த சந்திராயன் 3 விண்கலம் நிறுவனம் மூன்று ரொக்கெட்டுக்களில் இருந்து சிறி கரிக்கொட்டாவில் இருந்து கடந்த யூலை 13ம் திகதி விண்ணில் ஏவப்பட்டது.
தற்போது குறைந்த பட்சம் 174 குறைந்த பட்ச தூரமும் அதிக பட்சம் 1437 கிலோ மீட்டர் கொண்ட பூவட்ட சுற்றுப்பாதையில் சந்திராயன் வலம் வருகின்றது. இந்த நிலையில் சந்திராயன் 3 எடுத்த பூமி மற்றும் நிலவின் இரண்டு புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
இப்படங்கள் துல்லியமாக இருப்பதாக விஞ்ஞானிகள் உற்சாகமாக கூறியுள்ளனர். அதில் 120 விட்டம் கொண்ட பிதாகிரிஸ் பள்ளம் எரிமலைகளால் எரியப்பட்ட ஓசியான ஸ்புரோ சில்ராம் அரிஸ்ராக்கிஸ் பள்ளம் ராமர் பள்ளத்தாக்கு என நிலவில் மேற்பரப்பை தெளிவாக காணமுடிகின்றது.
இந்தப்படம் ஓகஸ்ட் மாதம் 6ம் திகதி நிலவில் இருந்து 18000ஆயிரம் முதல் 10000 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இதே போல் இஸ்ரோ வெளியிட்டுள்ள பூமியின் முன் படம் லண்டரில் உள்ள இமேற்றிங் கமரா மூலம் யூலை 14ம் திகதி எடுக்கப்பட்டதாகும்.
அடுத்த கட்டமாக சந்திராயனுடைய உயரம் படிப்படியாக மாற்றி அமைக்கப்பட இருக்கின்றது. திட்டமிட்டபடி ஓகஸ்ட் மாதம் இருபத்தி மூன்றாம் திகதி நிலவின் தென் துருவத்தில் நிலவில் மெதுவாக தரையிறக்கப்படும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.