ஜனாதிபதியுடனான சந்திப்பு நேற்றைய தினம் நிறைவடைந்து, வெளியேறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் M.A.சுமந்திரனுக்கு இராணுவ தளபரி ஜெனரல் ஷவேந்திர சில்வா தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியதாக தகவல்கள்வெளியாகியுள்ளன. .
மேலும், ஜனாதிபதியுடனான சந்திப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் M.A.சுமந்திரனுக்கு வடக்கிலுள்ள காணிகளை பாதுகாப்பு பிரிவினர் கையகப்படுத்துவதாக குற்றச்சாட்டை முன்வைத்தார் . இதற்கு இராணுவ தளபதி அவ்வாறான ஒன்று இடம்பெறவில்லை என்னும் பதிலை சுமந்திரனிடம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வடக்கில் காணி பிரச்சினைகள் இருக்குமானால், அது குறித்து இராணுவ தளபதியுடன் கலந்துரையாடுமாறு ஜனாதிபதி தமக்கு கூறியதாக சுமந்திரன், ஷவேந்திர சில்வாவிடம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.