பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக 46 ஆயிரம் பேர் வீடுகளில் இருந்து வெளியேறியுள்ளதாக சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் இன்று (திங்கட்கிழமை) தெரிவித்தனர்.
மிண்டானோவின் தெற்குப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், ஒன்பது பேரை காணவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சில பகுதிகளில் தண்ணீரின் அளவு மார்புக்கு மேல் உயர்ந்து நிற்பதாகவும், வெள்ளத்தின் உச்சக்கடத்தில் Ozamiz மற்றும் Clarin town ஆகிய நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அந்நகரில் வசித்து வந்த 20 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.