Thursday, January 23, 2025
HomeLatest NewsWorld Newsபிரேசிலில் வெள்ளத்தில் காணாமற்போன செல்ல பிராணிகள் - உரிமையாளருடன் மீண்டும் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம் !!!

பிரேசிலில் வெள்ளத்தில் காணாமற்போன செல்ல பிராணிகள் – உரிமையாளருடன் மீண்டும் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம் !!!

பிரேசிலில் வெள்ளத்தில் காணாமற்போன செல்ல பிராணிகள் – உரிமையாளருடன் மீண்டும் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம்
வெள்ளத்தில் பிரிந்துபோன தனது வளர்ப்பு நாய்களுடன் மீண்டும் இணைந்த உரிமையாளர் குறித்தான வீடியோ இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.பிரேசிலின் ரியோ கிராண்ட் சுலே மாகாணத்தில் கனமழை காரணமாக அங்கு திடீர் வெள்ளபெருக்கு ஏற்பட்டது. வெள்ளத்தில் சிக்கி இதுவரை 100-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகிய நிலையில் பலர் வீடுகளை இழந்தும், சொந்தங்களை பிரிந்தும் தவித்து வருகிறார்கள்.

இந்தநிலையில் பேரிடரின்போது பிரிந்துபோன தன் வளர்ப்பு நாய்களுடன் அதன் உரிமையாளர் மீண்டும் இணைவது குறித்தான காட்சிகள் தற்போது இணையத்தில் காட்டுத்தீயாக பரவுகிறது. அதில் பெருவெள்ளம் சூழ்ந்த நகர்ப்பகுதி நடுவே பைபர் படகு மூலம் முதியவர் ஒருவர் மீட்கப்பட்டார்.

மேலும் வெள்ளத்தில் சிக்கியபோது பிரிந்த அவரின் 4 வளர்ப்பு நாய்களும் மீட்புத்துறையினரால் மீட்கப்பட்டு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் பெருமகிழ்ச்சியில் அவர் தன் நாய்களை அணைத்தவாறு அவர் கதறி அழுதார். இந்த பதிவு காண்போரை நெகிழ வைத்து வேகமாக பகிரவும் செய்துள்ளது

Recent News