Wednesday, March 5, 2025
HomeLatest Newsஇலங்கையில் தங்கத்தையும் வென்றது பெட்ரோல் பரிசு! மணமக்கள் பூரிப்பு

இலங்கையில் தங்கத்தையும் வென்றது பெட்ரோல் பரிசு! மணமக்கள் பூரிப்பு

இலங்கையில் இடம்பெற்ற திருமண வைபவம் ஒன்றில், புது மணமக்களுக்கு பெட்ரோல் பரிசு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.

குறித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெகுவாக பகிரப்பட்டு வருகிறது.

இலங்கையில் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அனைத்து பொருட்களும் உச்ச விலையில் விற்கப்படுகிறது.

அத்துடன், எரிபொருள், எரிவாயு, மண்ணெண்ணெய் என அத்தியாவசிய பொருட்களுக்கும் தட்டுப்பாடு நீடிக்கின்றது.

இவ்வாறான நிலையில், தங்கத்துக்கு நிகராக பெட்ரோல் பரிசை மணமக்களுக்கு வழங்கியுள்ளமை பலரை சிரிக்க வைத்துள்ளதோடு, சிந்திக்கவும் வைத்துள்ளது.

Recent News