Thursday, January 23, 2025

இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட பூச்சிகொல்லி மருந்து; நெடுந்தீவு கடலில் மீட்பு.

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 35 போத்தல் பூச்சிகொல்லி மருந்து நேற்று வியாழக்கிழமை  கடற்படையினரால் மீட்கப்பட்டது.


சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

நெடுந்தீவு கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்று மிதந்து வருவதை அவதானித்த கடற்படையினர் சோதனையிட்டபோது அதில் பூச்சிக்கொல்லி மருந்துகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.


கடத்தல்காரர்கள் இந்தியாவிலிருந்து குழைத்த பூச்சிக்கொல்லி மருந்துகளை நடத்திய நிலையில் கடற்படையினரை கண்டதும் குறித்த பூச்சிக்கொல்லி மருந்து போதையை கடலில் வீசிவிட்டு தப்பி இருக்கலாம் என்ற கோணத்தில் கடற்படையினர் தொடர்ந்து விசாரணைய மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Videos