Tuesday, December 24, 2024
HomeLatest Newsதற்காலிக சாரதி அனுமதி பத்திரத்திற்கு பதிலாக நிரந்தர சாரதி அனுமதி பத்திரம்!

தற்காலிக சாரதி அனுமதி பத்திரத்திற்கு பதிலாக நிரந்தர சாரதி அனுமதி பத்திரம்!

தற்காலிக, சாரதி அனுமதிபத்திரம் வழங்கப்பட்டுள்ளவர்களுக்கு, எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் நிரந்தர சாரதி அனுமதி பத்திரம் வழங்கப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நிஷாந்த வீரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கமைய அஞ்சல் வாயிலாக நிரந்தர சாரதி அனுமதி பத்திரத்திற்கான அட்டை அனுப்பி வைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதுவரை ஆறு இலட்சம் பேருக்கு  தற்காலிக சாரதி அனுமதிபத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நிரந்தர சாரதி அனுமதி பத்திரத்திற்கான ஐந்து இலட்சம் அட்டைகள் கைவசம் இருப்பதாக தெரிவித்த அவர், ஓரிரு வாரங்களில் மேலும் ஐந்து இலட்சம் அட்டைகள் கிடைக்கப்பெறவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பிற செய்திகள்

Recent News