Saturday, December 28, 2024
HomeLatest Newsபேராதனை பல்கலைக்கழகம் இன்று முதல் மூடப்படும்; மாணவர்களை வெளியேறுமாறும் அறிவிப்பு!

பேராதனை பல்கலைக்கழகம் இன்று முதல் மூடப்படும்; மாணவர்களை வெளியேறுமாறும் அறிவிப்பு!

இலங்கையின் மிகப்பெரிய பல்கலைக்கழகமான பேராதனை பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது.

தற்போது நிலவும் சிரமங்கள் காரணமாக பரீட்சை உட்பட அனைத்து கல்வித் திட்டங்களும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு அனைத்து விடுதிகளும் உடனடியாக மூடப்படும் என இலங்கை பேராதனை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது .

எனவே அனைத்து மாணவர்களும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேறுமாறு இதன் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது .

கல்வி நடவடிக்கைகள் மற்றும் பரீட்சைகளின் ஆரம்பம் குறித்த தகவல்களை உரிய நேரத்தில் அந்தந்த பீடங்கள் அறிவிப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent News