Tuesday, December 24, 2024
HomeLatest Newsபேராதனை பல்கலைக்கழக புதிய மாணவருக்கு ஆபாச பகிடிவதை !

பேராதனை பல்கலைக்கழக புதிய மாணவருக்கு ஆபாச பகிடிவதை !

பேராதனை பல்கலைக்கழகத்தின் இணை சுகாதார பீடத்தின் முதலாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவர் ஒருவருக்கு சமூக ஊடகங்கள் வழியாக ஆபாசமான அழைப்புகள் வருவதாக பல்கலைக்கழக இணையத்தளத்திற்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக பல்கலைக்கழக ஒழுக்காற்று அதிகாரி நேற்று (04) தெரிவித்தார்.

சமூக ஊடகங்கள் வாயிலாக ஆபாசமான காணொளிகளை பரிமாற்றி இந்த புதிய வகையான பகிடிவதை மேற்கொள்ளப்படுவதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான முறைப்பாடு பேராதனை காவல்நிலையத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. குறித்த மாணவன் வீட்டில் இருந்து இணையவழியில் கல்வி கற்கும் போது வாட்ஸ்-எப் சமூகவலைத்தளம் ஊடாக அழைப்பு விடுத்து, ஆபாச காட்சிகளை பரிமாற்றி பகிடிவதைக்கு உட்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பான குரல் பதிவுகள் மற்றும் காணொளிகள் பல்கலைக்கழகத்தின் சுகாதார விஞ்ஞான பீடத்தின் ஒழுக்காற்று அதிகாரி ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

குறித்த ஆதாரங்கள் பின்னர் காவல்துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பேராதனை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

பிற செய்திகள்

Recent News