Friday, January 24, 2025
HomeLatest Newsதிருமணம் முடிந்து ஊர் திரும்பிய மக்கள்...!103 பேருக்கு நேர்ந்த துயர்...!அதிகாலையில் சோகம்...!

திருமணம் முடிந்து ஊர் திரும்பிய மக்கள்…!103 பேருக்கு நேர்ந்த துயர்…!அதிகாலையில் சோகம்…!

நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 103 பேர் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நைஜீரியாவின் வடக்கே நைஜர் மாகாணத்தில் உள்ள எக்போடி கிராமத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்று இடம்பெற்றுள்ளது.

அந்த நிகழ்வில் பலர் கலந்து கொண்டுள்ள நிலையில் திருமணம் நிறைவுற்ற பின்னர் 300 ற்கும் அதிகமானோர் ஒரு படகில் ஊருக்கு திரும்பியுள்ளனர்.

அது மட்டுமன்றி பலர் அந்த படகில் தமது மோட்டார் சைக்கிள்களை ஏற்றியுள்ளனர். அதனால் அதிக எடை காரணமாக படகு அதிகாலை 3 மணியளவில் திடீரென ஆற்றில் கவிழ்ந்துள்ளது.

தகவலறிந்து அங்கு வந்த மீட்பு குழுவினர் 100 ற்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளதுடன், சிறுவர்கள் உட்பட 103 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும் காணாமல் போயுள்ள பலரை தேடும் பணி தீவிரமாக இடம்பெற்று வருகின்றது.

இவ்வாறாக திருமணத்திற்கு சென்று விட்டு ஊர் திரும்பிய மக்கள் படகு கவிழ்ந்து பலியாகிய சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Recent News