Tuesday, December 24, 2024
HomeLatest Newsகடும் கொதிப்பில் மக்கள்! – பொது நிகழ்வுகளை தவிர்த்து வரும் ஆளும் தரப்பு

கடும் கொதிப்பில் மக்கள்! – பொது நிகழ்வுகளை தவிர்த்து வரும் ஆளும் தரப்பு

மின்வெட்டு, சமையல் எரிவாயு தட்டுப்பாடு, எரிபொருள் நெருக்கடி மற்றும் பொருட்களின் விலையேற்றத்தால் நாட்டு மக்கள் கடும் கொதிப்பில் உள்ள நிலையில், அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொது நிகழ்வுகளைத் தவிர்த்து வருகின்றனர் என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

அரசு மீதான அதிருப்தியை மக்கள் தம் மீது காட்டக்கூடும் என்பதாலும், பாதுகாப்பைக் கருத்தில்கொண்டுமே அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர் என்று தெரியவருகின்றது.

ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாரம சம்பத் பங்கேற்ற நிகழ்வொன்றின்போது, அவர் மீது முட்டை வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வீடு கூட முற்றுகையிடப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே ஆளுங்கட்சியினர் நிகழ்வுகளைத் தவிர்த்து வருகின்றனர்.

Recent News