Friday, November 15, 2024
HomeLatest Newsமருத்துவ பரிசோதனைகளுக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு அபராதம்!

மருத்துவ பரிசோதனைகளுக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு அபராதம்!

இரத்த பரிசோதனைக்காக ஆகக்கூடுதலான கட்டணத்தை அறிவிட்டனர் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட தனியார் வைத்தியசாலையில் பணிப்பாளர் சபைக்கு தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

 நுவரெலியா நகரில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றிலேயே இரத்த பரிசோதனைக்காக ஆகக்கூடுதலான கட்டணம் அறவிடப்பட்டுள்ளது. இது தொடர்பிலான வழக்கு, நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (29) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை பணிப்பாளர் சபை ஏற்றுக்கொண்டுள்ளது. அதனையடுத்தே நுவரெலியா நீதிமன்ற நீதவான் திலின எம்.பீரிஸ் 5 இலட்சம் ரூபாயை தண்டமாக விதித்தார்.

நுவரெலியாக நுகர்வோர் அதிகார சபைக்கு நோயாளர்கள் பலர் செய்திருந்த முறைப்பாட்டுக்கு அமைய, செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு தேடுதலின் போதே, இரத்த பரிசோதனைக்கு கூடுதலான கட்டணம் அறவிடப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

முழு இரத்தப் பரிசோதனைக்கு நோயாளர் ஒருவரிடம் இருந்து 400 ரூபாய் அறவிடப்படவேண்டும். எனினும், அந்த வைத்தியசாலையில் 550 ரூபாய் அறவிடப்படுகின்றது. அதனையடுத்தே அந்த வைத்தியசாலைக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகள் தெரிவித்தனர்

Recent News