நியூயோர்க்கில் ரூஸ்வெல்ட் ஹோட்டலை குத்தகைக்கு விட்டு 220 அமெரிக்கா டொலர்களை ஈட்டுவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
பாகிஸ்தானில் பொருளாதாரப் பிரச்சினை மிகமோசமடைந்து வரும் நிலையில் அரசு தற்சமயம் கடும் நிதிச் சிக்கலை எதிர்கொண்டு வருகின்றது.
பொருளாதாரப் பின்னடவின் விளைவாக மக்கள் அடிப்படை வசதிகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாது அல்லலுற்று வரும் நிலை தொடர்கின்றது.
இந் நிலையில் பணத்தை பெற்றுக்கொள்ளும் நோக்குடன் பாகிஸ்தான் தனக்குச் சொந்தமான நியூயோர்க்கில் உள்ள ரூஸ்வெஸ்ட் ஹோட்டலை குத்தகைக்கு விடுவதன் மூலம் 220 மில்லியன் கிடைக்குமென்பதால் வேறு வழியின்றி அம் மூடிவிற்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டுள்ளது.