Thursday, January 23, 2025
HomeLatest Newsதவறான பாலியல் உறவால் நோயாளி உயிரிழப்பு ; தாதியர் பணி நீக்கம் - இங்கிலாந்தில் சம்பவம்….!

தவறான பாலியல் உறவால் நோயாளி உயிரிழப்பு ; தாதியர் பணி நீக்கம் – இங்கிலாந்தில் சம்பவம்….!

இங்கிலாந்தில் வேல்ஸ் நகரிலுள்ள மருத்துவமனையொன்றில் தாதியாகக் கடமையாற்றி வந்த 42 வயதான பெனலோப் வில்லியம்ஸ் நோயாளி ஒருவருடன் ரகசிய உறவிலிருந்த வந்துள்ள நிலையில் நோயாளி உயிரிழந்துள்ளார். இந் நிலையில் குறித்த தாதி பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையின் பின்புறம்அமைந்துள்ள கார்கள் தரிக்குமிடத்தில் கார் ஒன்றில் பாலியல் உறவில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலே அந்த நோயாளி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தின் குற்றவாளியாக கருதப்பட்ட தாதியிடம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டதில் பின்வரும் விடயங்கள் அறியக் கிடைத்தன

குறித்த நோயாளி முகநூலூடாக உடல் நலப் பாதிப்பென செய்தி.அனுப்பியதாகவும் அதன் பின்னரே அவரை.பார்வையிடச் சென்றதாகவும் குறிப்பிட்டுள்ள வேளை 45 நிமிடத்திற்குட்பட்ட நேரத்தினுள்ளே அவருடன் செலவழித்ததாகவும் ஆரம்ப விசாரணையில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் போதே அவருடன் இரவில் உறவிலிலிருந்த சந்தர்ப்பத்திலே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த விடயம் தெரிய வந்துள்ளது. இது பற்றி தகவலறிந்து அதிகாரிகள் இறந்த நபரை மீட்கச் சென்ற போது அரை நிர்வாண கோலத்தில் இருந்ததாக அறிய முடிகின்றது. இத் தகவலை அறிந்தும் வில்லியம்ஸ் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற காரணத்திற்காகவும் தவறான உறவைக் கொண்டிருந்த காரணத்தாலும் தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Recent News