Thursday, December 26, 2024
HomeLatest Newsமுன்பதிவு செய்தவர்களுக்கு மாத்திரமே இன்று கடவுச்சீட்டு விநியோகம்-குடிவரவுத் திணைக்களம்!

முன்பதிவு செய்தவர்களுக்கு மாத்திரமே இன்று கடவுச்சீட்டு விநியோகம்-குடிவரவுத் திணைக்களம்!

இன்று முன்பதிவு செய்தவர்களுக்கு மாத்திரமே கடவுச்சீட்டு விநியோகிக்கப்படும் என குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, முன்பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்களில் ஒரு நாள் மற்றும் வழமையான சேவைகளின் ஊடக கடவுச்சீட்டு வழங்கப்படும்.

முன்பதிவு செய்யாதவர்களுக்கு இன்று எவ்வித சேவைகளும் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளதால், முன்பதிவு செய்யாதவர்களை அலுவலகங்களுக்கு வருகை தர வேண்டாம் என குடிவரவுத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News