Sunday, February 23, 2025
HomeLatest Newsவிமானத்தில் மாறிமாறி ஆவேசமாக சண்டையிட்ட பயணிகள்! வைரல் வீடியோ

விமானத்தில் மாறிமாறி ஆவேசமாக சண்டையிட்ட பயணிகள்! வைரல் வீடியோ

தாய்லாந்து நாட்டின் பாங்காக்கில் இருந்து கொல்கத்தாவுக்கு சென்ற விமானத்தில் இரு பயணிகள் சண்டையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்து நாட்டின் பாங்காக்கில் இருந்து கொல்கத்தாவுக்கு விமானம் பறக்க தொடங்கியதும் அதில் இருந்த 2 பயணிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அவர்களை அருகில் இருந்த பயணிகள் சமரசம் செய்து வைக்க முயன்ற போது அதனை கேட்காமல் மாறிமாறி ஆவேசமாக பேசினர்.

சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றி அவர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இச்சண்டையை நிறுத்த விமான பணிப்பெண்களும் முயற்சி மேற்கொண்டும் சண்டையை நிறுத்த முடியவில்லை.

பின்னர் கூடுதல் ஊழியர்கள் வந்து அவர்கள் இருவரையும் சமரசம் செய்து வேறுவேறு இருக்கைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

நடுவானில் விமானத்தில் நடந்த இச்சண்டை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Recent News