Wednesday, December 25, 2024
HomeLatest Newsகிளி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மீது தாக்குதல்; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!

கிளி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மீது தாக்குதல்; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!

கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மீது தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் பணியாற்றும் சுகாதாரத்துறை உத்தியோகத்தர்களுக்கான எரிபொருட்கள் கடந்த (23) கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு வழங்கப் பட்டுக் கொண்டிருந்த நிலையில் நபரெருவரால் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்தது.

குறித்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸாரால் நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அதாவது அரச கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் அரச அதிகாரி ஒருவரை தாக்க முற்பட்டமை போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டு இவ்வாறு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Recent News