Wednesday, December 25, 2024
HomeLatest NewsWorld Newsஎகிப்துக்கு புறப்பட்ட ஆசிய நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் !!

எகிப்துக்கு புறப்பட்ட ஆசிய நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் !!

எகிப்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் காசாவில் போரில் பாதிக்கப்பட்டவர்களை மலேசிய எம்.பி. க்கள் குழு ஒன்று பார்வையிட காசாவிற்கு விஜயம் செய்துள்ளதாக மத்திய கிழக்கு ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன ..

பாராளுமன்ற தூதுக்குழு துணை வெளியுறவு அமைச்சர் டத்துக் மொஹமத் பின் அலமின் தலைமையில் பாலஸ்தீன செம்பிறை சங்க தலைவர் தாரெக் அராபத்துடன் மருத்துவமனைக்கு வருகை தந்ததாக மலேசியாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அடுத்ததாக இஸ்ரேல் ஒரு பெரிய இராணுவத் தாக்குதலைத் திட்டமிட்டுள்ள காசாவின் ரஃபாவைப் பார்வையிட தூதுக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும் குறித்த குழு மக்களுக்கான சில நிவாரண உதவிகளை வழங்கியதாகவும் மத்தியகிழக்கு ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன .

பெரும்பான்மை முஸ்லீம் மக்கள்தொகையைக் கொண்ட மலேசியா, காசாவில் நடந்த போர் குறித்து இஸ்ரேலை கடுமையாக விமர்சித்ததுடன், அந்த இடத்தில் பாலஸ்தீனியர்களின் மரணங்களைத் தடுக்க உடனடியாக போர்நிறுத்தம் செய்ய அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது ..

Recent News