Saturday, January 18, 2025
HomeLatest Newsபாராளுமன்ற அமர்வு சற்றுமுன் ஆரம்பம்!

பாராளுமன்ற அமர்வு சற்றுமுன் ஆரம்பம்!

புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதை தொடர்ந்து நேற்றையதினம் முதல் அமர்வு நடைபெற்றது.

இந்நிலையில் நேற்றையதினம் பிரதி சபாநாயகர் தெரிவிற்கான வாக்கெடுப்பு நடைபெற்றதுடன் வாக்கெடுப்பின் பிரகாரம் அஜித் ராஜபக்ச தெரிவு செய்யப்பட்டார்.

இதேவேளை ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணை சபையில் விவாதிப்பது தொடர்பிலும் இலத்திரனியல் வாக்கெடுப்பு நடைபெற்றதுடன் வாக்கெடுப்பின் பிரகாரம் குறித்த பிரேரணை தோற்கடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்றைய தினத்திற்கான அமர்வு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் சற்றுமுன் ஆரம்பமாகியது.

Recent News