Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsநள்ளிரவில் கலைக்கப்பட்ட பாராளுமன்றம் - இம்ரான் கானுக்கு எதிராக சதிவலை..!

நள்ளிரவில் கலைக்கப்பட்ட பாராளுமன்றம் – இம்ரான் கானுக்கு எதிராக சதிவலை..!

பாக்கிஸ்தான் நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் முடிவதற்கு 3 நாட்களுக்கு முன்னதாக நேற்றிரவு நாடாளுமன்ற கலைக்கப்பட்டுள்ளது.

இது பாகிஸ்தான் அரசியல் கட்சிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானிலும் இந்தியாவைப் போல 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது.

நாடாளுமன்றம் பதவிக்காலம் முடிந்து 60 நாட்களுக்குள் தேர்தலை நடத்த வேண்டும். ஆனால் நாடாளுமன்றம் பதவிக்காலம் முடியும் முன்னரே அதனைக் கலைத்தால் 90 நாட்களில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்திக் கொள்ளலாம். கூடுதலாக 30 நாட்கள் கிடைக்கும் என்பதாலேயே பிரதமர் நாடாளுமன்றத்தை முன் கூட்டியே கலைக்க பரிந்துரைத்ததாக எதிர்க்கட்சிகள் குற்றஞ் சாட்டி வருகின்றன.


அண்மையில் தான் அரசு பரிசுப் பொருட்கள் ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவர் உடனடியாக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

நீதிமன்றத் தீர்ப்பின்படி, இம் ரான் கான் 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது. இனி நாடாளுமன்றத் தேர்தல் நடத்தினால் இம்ரான் கான் இல்லாத களத்தை சந்திக்கலாம் என்பதாலேயே பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டதாக இம்ரான் கான் கட்சியினர் குற்றஞ்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

Recent News