பிரதமர் மோடி, கொட்டும் மழையில் இராணுவ தளத்தில் இசை நிகழ்ச்சியுடன் கூடிய வரவேற்பினை ஏற்று கொண்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் அமெரிக்காவின் முதல் பெண்மணியான ஜில் பைடன் ஆகியோரின் அழைப்பின் பெயரில் பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் விமானம் மூலம் வாஷிங்டனிற்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
அங்கு அவருக்கு, வாஷிங்டன் டி.சி. நகரில் ஆண்ட்ரூஸ் இராணுவ தளத்தில் சிறப்பான வரவேற்பு அளிப்பதற்காக சீருடை அணிந்த இராணுவ வீரர்களின் இசை குழுவினர் தாயராக இருந்த வேளை மழை பெய்துள்ளது.
ஆயினும் அவர்கள், இசைக் கருவிகளை இசைத்து பாரம்பரிய முறைப்படி பிரதமர் மோடியை வரவேற்றுள்ள நிலையில் அந்த வரவேற்பினை கொட்டும் மழையிலும் அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பான காணொளிகள் இணையத்தில் பகிரப்பட்டுள்ள நிலையில் வைரலாகி வருகின்றது.