Thursday, December 26, 2024
HomeLatest Newsஇந்தியாவிலிருந்து பால்மா இறக்குமதி

இந்தியாவிலிருந்து பால்மா இறக்குமதி

இலங்கைக்கு தேவையான பால்மாவினை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கு கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த கலந்துரையாடல்கள் நேற்றைய தினம் இடம்பெற்றதாக இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு தேவையான பால்மாவினை அத்தியாவசிய தேவையாக கருதி இந்த கலந்துரைலயாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கையில் பால் உற்பத்தியினை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக இந்தியாவிலிருந்து குழுவொன்று இந்தியாவிற்கு வருகை தரவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Recent News