Saturday, January 25, 2025
HomeLatest Newsபலாலி – சென்னை விமான சேவை மீள ஆரம்பம் – கட்டணமும் குறைவு!

பலாலி – சென்னை விமான சேவை மீள ஆரம்பம் – கட்டணமும் குறைவு!

மூன்று வருட இடைவெளிக்குப் பின்னர் பலாலிக்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவை மீண்டும் தொடங்க உள்ளது.

அடுத்த வார தொடக்கத்தில் விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பலாலிக்கும் சென்னைக்கும் இடையிலான விமானக் கட்டணங்கள் கொழும்புக்கும் சென்னைக்கும் இடையிலான விமானக் கட்டணங்களை விட கணிசமாகக் குறைவாக இருக்கும் என விமான சேவை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

விமான சேவைகள் மற்றும் மலிவான விமானக் கட்டணங்கள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளமை வடக்கு மக்களுக்கு பெரிதும் உதவும் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்திருந்தார்.

Recent News