Sunday, January 19, 2025
HomeLatest Newsபாக்கிஸ்தானின் தொலைக்காட்சி பிரபல்யம் மரணம்

பாக்கிஸ்தானின் தொலைக்காட்சி பிரபல்யம் மரணம்

பாக்கிஸ்தானின் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து அரசியல்வாதியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட அமீர் லியாகுவைட் ஹசைன் நேற்றைய தினம் அவருடைய கராச்சி வீட்டில் சுயநினைவற்ற நிலையில் இருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட நிலையில் மரணமடைந்திருப்பதாக பாக்கிஸ்தான் செய்திகள் சற்று முன்னர் உறுதிப்படுத்தியுள்ளன.

50 வயதான ஹசைன் அவருடைய கராச்சி வீட்டில் சில நாட்களாக உடல் நல குறைவினால் அவதியுற்றதாகவும் பின்னர் சுயநினைவற்ற நிலைக்கு சென்றதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் ஹசைன் பல சர்ச்சைகளில் குறிப்பாக பாலியல் மற்றும் சொந்த திருமண விடயங்களில் சிக்கியுள்ளவர் என்பதுடன் அரசியல் விவாதங்களிலும் கடுமையான பேச்சாளராக தன்னை அடையாளப்படுத்தியவருமாவார்.

இவருடைய திடீர் மறைவு ரசிகர்களை பேரதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

Recent News