Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsபாக்கிஸ்தான் பொது தேர்தல் - போட்டியிடும் முதல் இந்து பெண்..!

பாக்கிஸ்தான் பொது தேர்தல் – போட்டியிடும் முதல் இந்து பெண்..!

பாஸ்தானில் அடுத்த வருடம் பிப்ரவரி 8ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.இந்த நிலையில், பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவின் பனெர் மாவட்டத்தில், இந்து மதத்தைச் சேர்ந்த சவீரா பர்காஷ் பொதுத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

பாகிஸ்தான் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், கைபர் பக்துன்க்வாவில் போட்டியிட பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் சவீரா பர்காஷ் வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார்.

மருத்துவராக இருந்து அண்மையில் ஓய்வுபெற்ற இவரது தந்தை ஓம் பர்காஷ், பாகிஸ்தான் மக்கள் கட்சியில் 35 ஆண்டுகாலமாக உறுப்பினராக இருந்தார். தந்தையின் அடியை பின்பற்றி, மகளும் அரசியலில் பயணிக்க, முதல் இந்துப் பெண்ணாக பாகிஸ்தான் தேர்தலில் போட்டியிடுகிறார்.

2022ஆம் ஆண்டு மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்றிருக்கும் சவீரா, பனெரிலிருந்து பொதுத் தொகுதியில் போட்டியிடும் முதல் பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent News