காஷ்மீரில் நடைபெற்ற ஜி 20 கூட்டத்தின் வெற்றி மீதான பாகிஸ்தானின் விரக்தியே எல்லை தாண்டிய ஊடுருவல் முயற்சிகளின் சமீபத்திய எழுச்சிக்கு காரணம் என பாதுகாப்பு நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த ஊடுருவல் முயற்சிகளின் அதிகரிப்பு ஜி 20 நிகழ்வின் நேரத்தில் தொடங்கி ஜூன், ஜூலை என நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்திய பாதுகாப்புப் படையினர் இந்த முயற்சிகளை திறம்பட எதிர்கொண்டனர். இதன் விளைவாக கடந்த இரண்டு மாதங்களில் 20 க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதுடன் ஏராளமானோர் கைதும் செய்யப்பட்டனர்.
பிராந்தியத்தில் அமைதிக்கு இடையூறு ஏற்படுவதைத் தடுக்க பாதுகாப்புப் படையினர் விழிப்புடன் இருக்கிறார்கள் என கூறப்படுகிறது.