Friday, January 24, 2025
HomeLatest Newsகலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவு கொடுக்கும் பாகிஸ்தான்!

கலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவு கொடுக்கும் பாகிஸ்தான்!

அண்மைய தரவுகளின் படி பாகிஸ்தான், கலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குருத்வாராக்களில் அடைக்கலம் கொடுத்துள்ளதாக அறியப்பட்டுள்ளது.

இந்த குருத்வாராக்களுக்கு இந்தியாவில் இருந்து சீக்கியர்கள் பிரார்த்தனைக்காக அடிக்கடி சென்று வருவது குறிப்பிடத்தக்கது.

1984 ஆம் ஆண்டு ஸ்ரீநகரில் இருந்து லகோரிக்கு சென்ற இந்திய விமானத்தை கடத்திய தீவிரவாதி என குற்றம் சாட்டப்பட்டுள்ள ரவீந்தர் சிங் பிங்கா எனும் நபர் தற்போது குருத்துவாரா பஞ்ச சாஹிப்பில் நடமாடியதை மக்கள் அவதானித்து உள்ளனர்.

இந்த குருத்வாராவின் 100வது ஆண்டு நிகழ்வை கொண்டாடுவதற்கு பல சீக்கியர்கள் சென்றிருந்தபோது வெளியாகி இருந்த புகைப்படத்தில் ஒன்றில் இவர் காணப்பட்டுள்ளார்.

இந்த தகவல் கிடைத்ததும் பாகிஸ்தான் அரசாங்கம் உடனடியாக இணையதளத்தில் இருந்து குறித்த புகைப்படத்தை நீக்கி இருந்தது. எவ்வாறாயினும் வலைதளத்தில் பகிரப்பட்ட அந்தப் புகைப்படத்தின் திரை அடி தற்போது மக்கள் மத்தியில் பகிரப்பட்டு வருகிறது.

1984-ம் ஆண்டு விமான கடத்தலுடன் தொடர்புடைய ரவீந்திர சிங் பிங்கா மற்றும் அவரது எட்டு கூட்டாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, பிற்பாடு பாகிஸ்தான் நீதிமன்றத்தால் இந்த தண்டனை குறைக்கப்பட்டு அவர்கள் வெளியேற்றப்பட்டிருந்தார்கள்.

அதன் பின் இன்றளவும் இவர்கள் பாகிஸ்தானில் வசித்து வருவதாகவும் இந்தியாவிற்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் அறியப்பட்டுள்ளது.

அது மாத்திரம் அன்றி Harvinder Singh alias Rinda, Wadhawa Singh, Paramjit Singh Panjwar, Lakhbir Singh Rode, Ranjeet Singh Neeta, Gajender Singh, Manjit Fauji and Manjit Pinka, ஆகிய நன்கு அறியப்பட்ட கலிஸ்தான் தீவிரவாதிகளும் அடிக்கடி இந்த குருத்வாராக்களில் நடமாடி வருவதாக இந்தியா ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Recent News