Thursday, January 23, 2025
HomeLatest NewsIndia Newsசிறையில் இருந்து 198 இந்திய மீனவர்களை விடுதலை செய்த பாகிஸ்தான்...!

சிறையில் இருந்து 198 இந்திய மீனவர்களை விடுதலை செய்த பாகிஸ்தான்…!

பாகிஸ்தான் சிறையில் இருந்த 198 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்திய கடல் எல்லையை தாண்டி சட்ட விரோதமாக பாகிஸ்தானின் கடற்பரப்பில் மீன் பிடிப்பதாக பல மீனவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

அவ்வாறாக 651 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு அந்நாட்டின் கராச்சி சிறையில் தற்போது அடைக்கப்பட்டுள்ளனர்.

அதில் 631 மீனவர்களின் தண்டனை காலம் முடிந்துள்ள நிலையில் மீண்டும் நாடு திரும்புவதற்காக காத்திருக்கின்றனர்.

இதற்கிடையே, கடந்த சில தினங்களுக்கு முன் கராச்சி சிறையில் இருந்த இந்திய மீனவர் ஒருவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

அதையடுத்து, வரும் 12 ஆம் திகதி 198 இந்திய மீனவர்களை விடுதலை செய்ய உள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் கூறியிருந்தது.

இந்நிலையில், கராச்சி சிறையில் இருந்து 198 இந்திய மீனவர்கள் நேற்றைய தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

விடுதலை செய்யப்பட்ட அந்த மீனவர்களை முதலில் லாகூருக்கு அனுப்பப்பிய பின்னர் வாகா எல்லையில் உள்ள இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

Recent News