Wednesday, December 25, 2024

சர்வதேச வர்த்தகத்தில் டொலரை கைவிட பாகிஸ்தான் திட்டம்…!

பாகிஸ்தான் நாடானது டொலரில் வர்த்தகம் செய்வதை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது.

அந்த நாடு, அமெரிக்க டொலரை அடிப்படையாக கொண்டு ஏனய்யா நாடுகளுடன் வர்த்தகம் செய்து வருகின்றது.

ஆயினும், ரஷ்யாவுடனான பாகிஸ்தானின் எண்ணெய் தொடர்பான வர்த்தகம் சீன நாட்டின் நாணயமான யுவானாக காணப்படுகின்ற நிலையில், ரஷ்யா கடந்த வாரம் பாகிஸ்தானுக்கு கச்சா எண்ணெய் வழங்கியது.

அதையடுத்து, நட்பு நாணயங்களில் செலுத்திய பணம் மூலமாக பாகிஸ்தானுக்கு எண்ணெய் வழங்க தொடங்கியதாக ரஷ்ய எரிசக்தி துறை மந்திரி நிகோலாய் ஷுல்கினோவ் தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து, ரஷ்யாவுடனான பரிவர்த்தனைகளில் பல்வேறு நாணயங்களை பயன்படுத்தவும், இரு தரப்பு வர்த்தகத்தில் டொலரின் பங்கைகினை குறைக்கவும் பாகிஸ்தான் தயாராக உள்ளதாக நாட்டின் வர்த்தக மந்திரி சையது நவீத் கமர் கூறியுள்ளார்.

அது மட்டுமன்றி, பண்டமாற்று முறையை ஆரம்பிப்பதன் மூலமாக வெளிநாட்டு நாணயங்களை நம்பியிருப்பதை குறைக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Videos