Monday, December 23, 2024
HomeLatest Newsவிழுந்து நொறுங்கிய பாகிஸ்தான் கடற்படையின் ஹெலிகாப்டர்- 3 பேர் உயிரிழப்பு...!

விழுந்து நொறுங்கிய பாகிஸ்தான் கடற்படையின் ஹெலிகாப்டர்- 3 பேர் உயிரிழப்பு…!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பாகிஸ்தான் கடற்படையினரின் ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த கோர விபத்தில் இரண்டு அதிகாரிகள் உட்பட ஒரு மாலுமி என 3 பேர் உயிரிழந்துள்ளனர்

பலுசிஸ்தான் மாகாணத்தின் துறைமுக நகரமான குவாதரில் ஹெலிகாப்டரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இடைக்காலப் பிரதமர் அன்வாருல் ஹக் காக்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Recent News